மனித உடலால் உணர முடியாத அளவிற்கு வெப்பநிலை உயரும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மனித உடலால் உணர முடியாத அளவிற்கு வெப்பநிலை உயரும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதன்படி நாளைய (05.05) தினம்   வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலால் உணரப்படும் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேபோல் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் "கவனம்" கோரும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4