பாடல் உரிமம் சர்ச்சை - நடிகர் ரஜினிகாந்தின் பதில்

#Cinema #Actor #Director #Old #Music
Prasu
2 years ago
பாடல் உரிமம் சர்ச்சை - நடிகர் ரஜினிகாந்தின் பதில்

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வர்வேரபை பெற்றது.

மேலும் இளையராஜா இசையில் ரஜினிகாந்த நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த 'வா வா பக்கம் வா...' பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு டிஸ்கோ டிஸ்கோ என பாடல் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தற்போது பதிலளித்துள்ளார், "அது இளையராஜாவிற்கும் தயாரிப்பாளருக்கும் உண்டானது" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4