கனடா ஒரு வலுவான பாதுகாப்பான நாடு : பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து!
கனடா ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு மற்றும் அதன் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்ட ஒரு "சட்டத்தின் ஆட்சி நாடு" என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கனடா நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், இது முக்கியமானது, ஏனென்றால் கனடா ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஒரு சட்டத்தின் ஆட்சி நாடு, அத்துடன் அதன் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கனேடியனுக்கும் கனடாவில் பாகுபாடு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் பாதுகாப்பாகவும் வாழவும் அடிப்படை உரிமை உண்டு எனக் கூறிய அவர்,நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கனடாவின் சீக்கிய சமூகத்தில் பலர் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.