பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடந்த பயங்கரம் : தீயில் கருகி உயிரிழந்த குழந்தை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
பிரித்தானியாவில் பிராட்போர்டில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவிபத்து இன்று (05.05)அதிகாலை 01 மணியளவில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணும் மற்ற மூன்று குழந்தைகளும் தீயில் இருந்து தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய புலனாய்வாளர்களுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.