IPL - 221 ஓட்டங்கள் குவித்த டெல்லி அணி

#Delhi #IPL #T20 #Cricket #Rajasthan
Prasu
2 years ago
IPL - 221 ஓட்டங்கள் குவித்த டெல்லி அணி

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் களம் இறங்கினர். 

இதில் ப்ரேசர்-மெக்கர்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்கர்க் 19 பந்தில் அரைசதம் அடித்த நிலையில் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். 

இதையடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 1 ரன்னிலும், அக்சர் படேல் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரிஷப் பண்ட் களம் புகுந்தார். மறுபுறம் அபிஷேக் பொரேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்தில் 65 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரிஷப் பண்ட் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார்.இதில் பண்ட் 15 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குல்பாடின் நைப் களம் இறங்கினார்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக பொரேல் 65 ரன், ப்ரேசர் மெக்கர்க் 50 ரன் எடுத்தனர்.

 ராஜஸ்தான் தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4