கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா நடைமுறை : பெரும்பாலான இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
6 months ago
கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா நடைமுறை : பெரும்பாலான இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

கனடா அங்கு வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது.

குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்த 35,700பேருக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அழைப்பிதழ்களை அனுப்புவதை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.  

இதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தவர்கள், தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், புதிய வீசா நடைமுறையை பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது என கனடா அறிவித்துள்ளது.  

இதன்படி, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!