மாணவ மாணவிகளுக்கு மாத்திரம் அல்ல ஆசிரியர்களுக்கும் சீருடை அவசியம்!!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
6 months ago
மாணவ மாணவிகளுக்கு மாத்திரம் அல்ல ஆசிரியர்களுக்கும் சீருடை அவசியம்!!

பொதுவாகவே சீருடை என்பது எல்லாத் துறையினருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இது சமத்துவத்தை பேணுகின்றது. அதேவேளை போட்டி மனப்பான்மைகள் இல்லாமல், சமத்துவ சிந்தனையோடு வேலையில் கவனம் சிதறாமல் ஒரே சிந்தனையில் வைத்திருக்க வழிவகுக்கும்.

இதிலே மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரமும் தனிநபர் பொருளாதாரமும் தங்கி உள்ளது. ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு ஆடைகள் என்று வாங்கும் பொழுது அதற்கான செலவு மிக அதிகமாகிறது. 

உதாரணமாக ஆசிரியர் தொழிலில் உள்ளவர்கள் ஐந்து நாளும், ஐந்து விதமான ஆடைகளை அணிய முற்படும்பொழுது மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 ஆயிரங்களுக்கு மேலாக ஆடைகளுக்காக மட்டும் செலவு செய்கின்றார்கள். இதையே பத்து ஆண்டுகளுக்கு கணக்குப் பார்த்தீர்கள் என்றால் தலையை சுற்றும். மொத்தச் சம்பளத்தில் பெரும்பகுதியை ஆடைகளுக்காகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுவே சீருடையாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கு தொகையே போதுமானதாக இருக்கும்.

ஆசிரியர் சீருடையின்  மூலம் ஆசிரியர்களின் நலமும், மாணவர்களின் நலமும் பாதுகாக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு ஆசிரியரின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளது.

பொதுவாக ஆடைகளின் நிறங்களுக்கு ஒவ்வொரு தன்மைகள் உண்டு. சில ஆடைகளின் நிறங்கள் ஆசிரியரின் மனநிலையும், உடல் நிலையும் மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உள்ளது.(பச்சை, மெல்லிய மஞ்சள் போன்ற நிறங்கள் பொருத்தமானவை) .

அடுத்ததாக மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து அவர்களைப் போன்று தாமும் விதவிதமாக ஆடைகளை அணிய வேண்டும் என்கின்ற சிந்தனையும், அதை ரசிப்பதில் கவனச்சிதைவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. 

ஆசிரியர்களுக்கும் இதனால் பொருட்செலவு, விதவிதமான ஆடைகளை வாங்க வேண்டும் என்கின்ற நேரச் செலவு போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.

எனவே இது தொடர்பான அரசும், அதிகாரிகளும் இதை கவனத்தில் எடுத்து ஆசிரியர் சீருடையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நன்றி : சோதிடர் சுதாகர்

 சித்தர் சோதிட நிலையம்,சூரிச், சுவிஸ்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!