IPL - 241 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு அணி

#IPL #T20 #Cricket #Punjab #Bengaluru #2024
Prasu
10 months ago
IPL - 241 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு அணி

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.

அத்துடன் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விராட் கோலி , கேமரூன் கிரீன் களத்தில் இருந்தனர்.அரைமணி நேரம் பாதிக்கப்பட்ட ஆட்டம், மழை நின்ற பின் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

தொடர்ந்து விராட் கோலி அதிரடி காட்டி அரை சதமடித்தார். மறுபுறம் கேமரூன் கிரீன் நிலைத்து ஆடினார். அரைசதம் கடந்த பிறகு விராட் கோலி பஞ்சாப் அணியின் துவம்சம் செய்தார். 

சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மறுபுறம் அதிரடி காட்டிய கிரீன் 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 241 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து 242 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!