பூமியை தாக்கும் மிகப் பெரிய சூரிய புயல் : பிரித்தானிய மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
மிகப் பெரிய சூரிய புயல் பூமியை தாக்கும்நிலையில், இன்று இரவு (11.05) பிரித்தானியா வாழ் மக்களால் அதனை பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) 2005 க்குப் பிறகு அதன் முதல் கடுமையான சூரிய புயல் எச்சரிக்கையை நேற்று வெளியிட்டது.
ஏறக்குறைய இரு தசாப்தங்களின் பின் ஏற்படும் இந்த சூரிய புயல் மிகப் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சூரிய புயல் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் தெற்கின் சில பகுதிகளில் அரிதாகவே தென்படும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சூரிய புயல் காரணமாக, அரோரா பொரியாலிஸ், மின் கட்டம் மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.