ஈழத்தமிழர்களுக்காக லண்டன் வரும் RAP இசை பாடகரும் இசையமைப்பாளருமான HipHop தமிழா

#SriLanka #London #MusicConcert #Hip Hop Tamila
PriyaRam
1 month ago
ஈழத்தமிழர்களுக்காக லண்டன் வரும்  RAP இசை பாடகரும் இசையமைப்பாளருமான HipHop தமிழா

இந்தியாவில் தமிழ் Rap இசையின் முன்னோடியாக திகழ்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. 

இவருக்கு தமிழ் மீதும் தமிழர்களின் கலாச்சாரம் மீது அதீத காதல் கொண்டவர். தமிழ் என்றாலே இவர் தனது கடமைகள் அனைத்தையும் விடுத்து அதற்காக போராட துணிந்தவர். இவரது தமிழ் மீது கொண்ட தீராத காதலினால் 8 அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஆவணப்படமான "தமிழி" படத்தை உருவாக்கினார். 

 அது மட்டுமன்றி இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் "மாணவன்" எனும் ஆவண படத்தையும் உருவாக்கினார். தமிழ் மீது பற்று கொண்ட ஏராளமான இளைஞ்ர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள். தமிழர்களின வரலாற்று தொன்மைகளினை பாதுகாக்க வேண்டுமென ஏராளாமான நடவடிக்கைகளினை எடுத்து வருகின்றார். 

தமிழர்களின் கலாச்சாரங்களின் சிறந்த விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு வந்த தடையை உடைக்க இவர் இளைஞர்களுடன் சேர்ந்து ஒரு மாபெரும் போராட்டத்தினை சிறப்பாக நடாத்தி அதன் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர்களில் இவரும் ஒரு முதன்மையானவர். 

அது மட்டுமன்றி சோழர்கள் காலத்தில் இருந்த அரும்பொக்கிசங்களினை தேடி கண்டு பிடிக்க வேண்டுமென்பதற்காக அயராது பாடுபட்டவர் ஆவார். தமிழர்களின் சிறப்புக்களினை உலகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக தனது பட்டப்படிப்பினை அது தொடர்பாகவே படித்து பட்டமும் பெற்றார். 

இவர் படித்து பட்டம் பெற்றதன் பின்பே தமிழர்களின் தொல்லியல்களினை தேடி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர்களில் எத்தனையோ பாடகர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைப்பதில்லை, ஆனால் ஆதி தனது படங்களில் ஈழத்தமிழ் பாடகர்களினையும் , இந்திய தமிழ் பாடகர்களினையும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் தனது இசைப்பயணத்தில் சென்று வருகின்றார். 

 இதன் காரணமாக ஈழத்தமிழ் பாடகியான கரிஷ்மா ரவிச்சந்திரன் அவர்களினை தொடர்ந்து தனது படங்களில் பாடல்களினை பாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து வருகின்றார். 

 ஈழத்தமிழர்கள் மீது திராக்காதல் கொண்ட இவர் ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு தான் தனது இசையில் வரும் படங்களில் பாடுவதற்கு சந்தர்ப்பங்களினை வழங்குவேன் மேடைகளில் குறிப்பிட்டு வருகின்றார். 

இதன் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுக்காக 19-ஜூலை-2024 லண்டனிற்கு தனது முதல் பயணத்தினை மேற்கொள்கின்றார். லண்டனிற்கு வரும் இவர் சில ஈழத்து கலைஞர்களினை சந்தித்து அவர்களுக்கான வாய்ப்பினை வழங்க வாய்ப்பு உள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

images/content-image/2024/03/1715419434.png