IPL - டெல்லி அணிக்கு 188 ஓட்டங்கள் இலக்கு
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று இன்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி , பாப் டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் முகேஷ் குமார் பந்துவீச்சில் டு பிளசிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஜத் படிதார் , வில் ஜாக்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.அரைசதமடித்த ரஜத் படிதார் 32 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 187 ரன்கள் எடுத்தது.
டெல்லி சார்பில் கலீல் அகமது , ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து 188 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.