IPL - லக்னோவுக்கு எதிராக 208 ரன்கள் குவித்த டெல்லி அணி

#Delhi #IPL #T20 #Cricket #Lucknow
Prasu
2 years ago
IPL - லக்னோவுக்கு எதிராக 208 ரன்கள் குவித்த டெல்லி அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க் அர்ஷத் கான் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஷாய் ஹோப், போரெல் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். 

ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த போரெல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் லக்னோ அணியின் பந்துவீச்சை துவசம்சம் செய்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் அரைசதமடித்தார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4