IPL டெல்லி அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த போரெல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் லக்னோ அணியின் பந்துவீச்சை துவசம்சம் செய்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் சார்பில் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 61 (27) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷத் கான் 58 (33) ரன்களும், நவீன் உல் ஹக் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், கலில் அகமது, அக்சர் பட்டேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.