மழையுடனான வானிலை மேலும் தொடரும்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் வளிமண்டலவியல் இடையூறு தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆனபடியினால் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடர்க்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில், சுமார் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே