என்ன நடந்தாலும் எங்கள் நட்பு தொடரும் - சைந்தவி

#Actor #TamilCinema # divorce #Kollywood #Music
Prasu
2 years ago
என்ன நடந்தாலும் எங்கள் நட்பு தொடரும் - சைந்தவி

ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. 

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன. ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். 

இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது- யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. 

ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4