லண்டன் Wembley யில் தமிழர் பகுதியில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்!
#Tamil People
#Crime
#London
Mayoorikka
11 months ago

லண்டன் Wembley யில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 24 மணிநேர கடைகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்குள் இரவு நேரங்களில் புகுந்து தமிழ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களையும் அங்கு பணிபுரிபவர்களையும் தாக்கும் சம்பவம் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக கடை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்தோடு வீதியோரங்களில் செல்பவர்களையும் தாக்கி அவர்களுடைய தொலைபேசிகள் மற்றும் பணங்களையும் பறிமுதல் செய்து கொண்டு தப்பி செல்கின்ற சம்பவம் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வெம்பிளி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



