IPL - 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

#IPL #T20 #Cricket #Lucknow #Mumbai
Prasu
2 years ago
IPL -  18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பூரன் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுலும் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய பூரன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. 

அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா மற்றும் சாவ்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் களமிறங்கினர். 

தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். பிரேவிஸ் நிலைத்து ஆடினார். அதிரடி காட்டிய ரோகித் சர்மா அரைசதமடித்தார். மறுபுறம் பிரேவிஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் போராடிய நமன் திர் அரைசதமடித்தார். 

இருப்பினும் மும்பை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை,. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது . இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4