கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

#SriLanka #Colombo
Mayoorikka
2 years ago
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,இன்று கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 இதன்படி, இன்று காலை வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பால், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

 இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இன்றைய தினம் நினைவுகூரவுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 இதற்கமைய, வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு, வெள்ளை மலர்களுடன் வருமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

 இதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் நேற்று (17) மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4