ஹர்திக் பாண்ட்யாவுக்கு 30 லட்சம் அபராதம்

#IPL #Cricket #Lucknow #Mumbai #Fined
Prasu
6 months ago
ஹர்திக் பாண்ட்யாவுக்கு 30 லட்சம் அபராதம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. 

இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது. மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!