பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
#Britain
#England
#Mullivaikkal
Mayoorikka
11 months ago

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் பிரித்தானியாவில் ஒக்ஸ்ஃபொர்ட் வளாகத்தில் உள்ள உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவு நாள் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரை ஒக்ஸ்ஃபொர்ட் வளாகத்தில் உள்ள உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



