IPL - 159 ஓட்டங்கள் குவித்த ஐதராபாத்

#IPL #T20 #Cricket #hyderabad #Kolkatta #2024
Prasu
2 years ago
IPL - 159 ஓட்டங்கள் குவித்த ஐதராபாத்

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. 

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அகியோர் களம் இறங்கினர்.

இதில் ஹெட் 0 ரன், அபிஷேக் சர்மா 3 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ராகுல் திரிபாதி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். 

மறுபுறம் களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ரன், ஷபாஸ் அகமது 0 ரன், ஹென்றிச் க்ளாசென் 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து அப்துல் சமத் களம் புகுந்தார். 

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய திரிபாதி அரைசதம் அடித்த நிலையில் 55 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். 

இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சன்வீர் சிங் டக் அவுட் ஆனார். இதையடுத்து அப்துல் சமத் உடன் கேப்டன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். 

இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4