IPL 2024 - தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றம்
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் காட்மோர் ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் டாம் கோலர் காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 45 (30) ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்களும், துருவ் ஜூரெல் 8 ரன்களும் எடுத்து வெளியேறினார் இறுதியில் பவெல் 16 (8) ரன்களும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.