வியட்நாம் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற டோ லாம்
#President
#Official
#Vietnam
#sworn
Prasu
6 months ago
அண்டை நாடான வியட்நாமில் அதிபர் வோ வான் துவோங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த சம்பவத்தில் அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
எனவே வியட்நாம் அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிபர் பதவியில் இருந்து வோ வான் துவோங் விலகினார். இந்தநிலையில் பொது பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த டோ லாம் (வயது 80) புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
வியட்நாமின் பாதுகாப்புத்துறை உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அவர் 2016-ம் ஆண்டு முதல் பொதுபாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர்,ஊழலை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.