பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் ரிஷி சுனக் : திகதி அறிவிப்பு!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இப்போது பிரிட்டன் தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டவுனிங் தெருவுக்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி மன்னரைச் சந்தித்ததாகக் கூறினார்.
இந்த கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்டார் எனக் கூறிய அவர், ஜுலை 04 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இப்போது பிரிட்டன் தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் மற்றும் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறோமா அல்லது மீண்டும் முதல் நிலைக்குச் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.