தைவானின் கடல் மற்றும் வான் பகுதியில் பயிற்சியை மேற்கொள்ளும் சீனா!
தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான் மண்டலத்தில் இரண்டு நாள் ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது.
தைவானில் நடக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கும் தைவானுக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பது இரகசியமல்ல. தைவானுடனான அமெரிக்காவின் நெருங்கிய உறவுகளுக்கு சீனாவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சீனா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தைவான் அருகே கடல் மற்றும் வான் மண்டலத்தில் அவ்வப்போது ராணுவ பயிற்சிகளை நடத்தி வருகிறது.
தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்று மூன்றே நாட்களில் தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளமை சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.
சீனாவின் ராணுவப் பயிற்சி தைவானில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், தைவான் ராணுவம் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.