அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம்

#Death #America #GunShoot #University
Prasu
3 weeks ago
அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம்

அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர். பார்மொடன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

36 வயதுடைய ஆணும் 44 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் மார்பில் சுடப்பட்டுள்ளனர். மற்றொருவர் கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். 

குற்றவாளிகள் இருவரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தின் அருகில் நடத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.