வியட்நாமில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

#Death #fire #Building #Vietnam
Prasu
3 weeks ago
வியட்நாமில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டு மீட்டர் அகலமான பாதையில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் தீ வேகமாக பரவி எரிந்தது. இதனால் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலர் தீயில் சிக்கி கொண்டனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.