IPL - 113 ஓட்டங்களுக்கு சுருண்ட ஐதராபாத் அணி

#IPL #T20 #Cricket #hyderabad #Kolkatta #Final #2024
Prasu
2 years ago
IPL - 113 ஓட்டங்களுக்கு சுருண்ட ஐதராபாத் அணி

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதி வருகின்றன.

இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். 

முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல்(0 ரன்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட் ஆனார். மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ரன்னில் அவுட் ஆனார். 

கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ரன்னிலும், அப்துல் சமத் 12 ரன்னிலும், கிளாசன் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்கள் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதன் மூலம் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கி விளையாட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4