ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு!
காசா பகுதியின் ரஃபா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்கை நோக்கி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஆனால், தெற்கு காஸா நகரமான ரஃபாவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் கூறுகிறது.
இருப்பினும், "துல்லியமான ஆயுதங்கள் மற்றும் துல்லியமான உளவுத்துறையின் அடிப்படையில்" ரஃபாவில் உள்ள ஹமாஸ் தளத்தை அதன் விமானப்படை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் ஜனவரி மாதத்திற்கு பிறகு நடந்த முதல் நீண்ட தூர தாக்குதல் என்று கூறப்படுகிறது.