காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 35 பாலஸ்தீனர்கள் மரணம்

#Death #Attack #Missile #Israel #War #Hamas #Gaza
Prasu
5 months ago
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 35 பாலஸ்தீனர்கள் மரணம்

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். காசா நகரமே மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருவதால் போரை நிறுத்த பல நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. 

ஆனாலும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. 

காசாவில் இருந்து இந்த ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன. இதையடுத்து இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. 

ஆனாலும் சேத விவரம், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த சண்டையில் 35 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!