நியூ கலிடோனியாவில் அமுற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கம்!

பிரான்ஸின் ஒருங்கிணைந்த பகுதி தீவான நியூ கலிடோனியாவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் புதிய தேர்தல் சீர்த்திருத்த சட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் கலவரங்கள் வெடித்தன.
இந்நிலையில் தற்போது அந்த சட்டமூலத்தை அமுற்படுத்துவதை ஜனாதிபதி பிற்போட்டுள்ளார்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் கலவரங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மாலை 06.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுற்படுத்தப்படும் எனவும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நியூ கலிடோனியாவில் உள்ள பிரெஞ்சு அரசாங்க அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீவுக்கூட்டம் அமைதியாக இருந்தாலும், முக்கிய நகரமான நௌமியாவின் Vallee-du-Tir மாவட்டத்தில் சில இடையூறுகள் பதிவாகியுள்ளன. கலவரம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



