உலகளவில் பிரபலமான All Eyes On Rafah ஹேஷ்டேக்
பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது.