புதிய தோற்றத்தில் நடிகை ஹன்சிகா

#Actress #TamilCinema #Film #Kollywood
Prasu
2 years ago
புதிய தோற்றத்தில் நடிகை ஹன்சிகா

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 

2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேகிங் வீடியோவை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். 

ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4