சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை

#Actor #TamilCinema #wife #Pregnant #Kollywood
Prasu
2 years ago
சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை

சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். 

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டார்.

இந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமான வயிறுடன் காணப்பட்டார். இதனால் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போகிறது என்ற தகவல்கள் தீ போல பரவின.

இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 அதில், "எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4