முன்னோரை வழிபட்டால் முன்னேற்றம் காணும் துலா ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
முன்னோரை வழிபட்டால் முன்னேற்றம் காணும் துலா ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். பரணி: புதிய பாதை தெரியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். முயற்சியில் வெற்றி உண்டாகும்.கார்த்திகை 1: திட்டமிட்டு உங்கள் செயல்களில் லாபம் அடைவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: செயல்களில் இழுபறி உண்டாகும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.மிருகசீரிடம் 1,2: வருமானத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.திருவாதிரை: முன்னோரை வழிபட்டு செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.புனர்பூசம் 1,2,3: நண்பர் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: செயல்களில் லாபம் காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: திட்டமிட்ட வேலை இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.ஆயில்யம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாக்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். விழிப்புடன் செயல்படுவது நல்லது.பூரம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேறும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். வேலையில் நெருக்கடி ஏற்படும். கவனமாக செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: உங்கள் முயற்சியில் இன்று வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்:

சித்திரை 3,4: முன்னோரை வழிபட்டு முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் கூடும். நெருக்கடி விலகும்.சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை தேடிவரும். செயல்களில் லாபம் அவசியம்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். முயற்சி பலிதமாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.அனுஷம்: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது வேறாக மாறும். கேட்டை: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகுவர்.உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் இன்று கைக்கு வரும்.திருவோணம்: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.அவிட்டம் 1,2: மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடித்து லாபம் காண்பீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் உங்களுக்கு நல்ல பெயர் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருவாய் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.உத்திரட்டாதி: உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும் என்பதால் ஒவ்வொன்றிலும் எச்சரிக்கை அவசியம்.ரேவதி: முன்னோர் வழிபாட்டால் மனம் தெளிவாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.