ஷேக் ஹசீனாவின் முன்னாள் உதவியாளர் டாக்காவில் கைது

#ARREST #government #LANKA4 #Bangladesh #Official #L4
Prasu
25 minutes ago
ஷேக் ஹசீனாவின் முன்னாள் உதவியாளர் டாக்காவில் கைது

வங்கதேசத்தின் பதவியிறக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் முன்னாள் துணை ஊடகச் செயலாளர், மேலும் இருவருடன் சேர்ந்து தலைநகர் டாக்காவில் கைது செய்யப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேக் ஹசீனாவின் முன்னாள் துணை ஊடகச் செயலாளரான கே.எம். சகாாவத் மூன் மற்றும் அவருடன் இருந்த இருவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.எஸ் (BSS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூனுடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரும், முன்னாள் துணை ஆணையர் முகமது இலியாஸ் ஹொசைன் மற்றும் வருமான வரி வழக்கறிஞர் சூஃபி முகமது அல் மாமுன் ஆவர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'டெய்லி ஸ்டார்' நாளிதழின் தகவல்படி, டாக்கா நகரின் தன்போண்டி பகுதியில் 'ஜாதியதாபாதி சத்ரா தல்' (JCD) அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இவர்களைப் பிடித்து வைத்திருந்த நிலையில், பின்னர் அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!