கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!

கேரள கஞ்சா ஒரு தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் வட கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் இருந்து 70 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  

இதன் பெறுமதி 28 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4