மின்சார சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை மின்சார சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது வாக்குப்பதிவு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. மசோதாவிற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே