இரணைமடு குளம் அருகில் தண்ணீர் இன்றி காணப்படும் 42000 ஏக்கர் வயல் நிலம்

#SriLanka #Kilinochchi #Paddy #iranaimadu kulam
Prasu
2 years ago
இரணைமடு குளம் அருகில் தண்ணீர் இன்றி காணப்படும் 42000 ஏக்கர் வயல் நிலம்

இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது.

அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது.

அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை. அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. 

சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். 

இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்.

அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும் ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் . 

அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும். 

உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும். 

அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது.

இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும் குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள். 

ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும். 

இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது. 

இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும் யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது.

இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும். 

 இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும் நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4