மேஷ ராசியினருக்கு வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறி தடைகள் நீங்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
மேஷ ராசியினருக்கு வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறி தடைகள் நீங்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: திட்டமிட்டிருந்த வேலைத் தள்ளிப்போகும். முயற்சிக்கேற்ற வருவாய் வரும். போட்டியாளரால் சங்கடம் தோன்றும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திடீர் வரவினால் பொருளாதார நெருக்கடி நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். பணவரவு திருப்திதரும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.ரோகிணி: மனதில் இருந்த குழப்பம்நீங்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்கள். மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத தடைகளால் உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும் சிந்தித்து செயல்படுவது நன்மையாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் செயல்களில் நெருக்கடி ஏற்படும். வரவு செலவில் கவனம் தேவை.திருவாதிரை: பண வரவில் இருந்த தடை நீங்கும். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்சினை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். எதிர்ப்பு வலுக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

கடகம்: 

புனர்பூசம் 4: முயற்சி இழுபறியாகும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை.பூசம்: உங்கள் செயல்களால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.ஆயில்யம் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி இழுபறியாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் அனுகுமுறையால் வருமானத்தில் உண்டான தடைகள் விலகும். நிதிநிலை உயரும்.பூரம்: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். யோசித்து செயல்படுவது நன்மையாகும்.உத்திரம் 1: எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கமான செயல்கள் ஆதாயமாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வந்துசேரும். அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடைகள் உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1,2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மற்றவர் விமர்சனத்திற்கு ஆளாக நேரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். வரவேண்டிய பணம் இழுபறியாகும். கவனமாக செயல்படுவது அவசியம்.சுவாதி: உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: எதிர்பாராத பிரச்சினைகள் தேடிவரும். வருமானத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சியில் சங்கடங்களை சந்திப்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.அனுஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.கேட்டை: முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.

தனுசு

மூலம்: இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவிற்குவரும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.பூராடம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனம் குழப்பமடையும்.உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் உழைப்பால் லாபம் காண்பீர்கள் மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தோர் விலகிச் செல்வார்கள்.திருவோணம்: நீண்டநாள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: செலவுகள் செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர்கள். வரவு இழுபறியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பாராத சங்கடங்கள் இன்று தோன்றும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அமைதி காப்பது நன்மையாகும்.சதயம்: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். யோசித்து செயல்படுவது நன்மையாகும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயலில் தடைகளை சந்திப்பீர்கள். மனம் சோர்வடையும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.ரேவதி: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்றாலும் போராடி வெற்றி அடைவீர்கள். வரவு திருப்திதரும்.