தென் மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தென் மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இன்று (08) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.  

இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.  

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 40-50 கி.மீற்றர் வேகத்தில் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை தற்காலிக்க பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4