நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09.06) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல காலகட்டங்களில் லேசான மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4