ஜனாதிபதிக்கு எதிராக பொதுஜன பெரமுன செயற்படுவது முறையற்றது!

#SriLanka #Sri Lanka President #SLPP
Mayoorikka
2 years ago
ஜனாதிபதிக்கு எதிராக பொதுஜன பெரமுன செயற்படுவது முறையற்றது!

ஜனாதிபதியை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் செயற்படுவது முறையற்றது.

 நெருக்கடியான சூழலில் தான் தலைவர்கள் தோற்றம் பெறுவார்கள். ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தே தெரிவித்தார்.

 கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே தீர்வு காண முடியும் என பொதுமக்கள் குறிப்பிடுகிறார்கள்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசி;ங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது.

பொருளாதார ரீதியில் அடைந்துள்ள தற்காலிக ஸ்திரத்தன்மையை நிலையானதாக உறுதிப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும். நெருக்கடியான சூழலில் தான் தலைவர்கள் தோற்றம் பெறுவார்கள்.

ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்க சிறந்த அரச தலைவர் என்பது 2022 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது வெளிப்பட்டது.நெருக்கடிகளை கண்டு தப்பிச் சென்ற அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பேச்சுக்கள் கேட்பதற்கு மாத்திரம் சிறந்ததாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் ஒருசிலர் செயற்படுவது முறையற்றது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4