அரச துறையினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : அரசாங்கம் விரும்பினாலும் முடியவே முடியாது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச துறையினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : அரசாங்கம் விரும்பினாலும் முடியவே முடியாது!

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்படி கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதன்படி 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் தீர்வுகளை முன்மொழிந்து முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4