அதிகம் புகைபிடித்த சிறுமிக்கு நேர்ந்த கதி

#Smoke #Britain #Girl #Ciggerette
Prasu
2 years ago
அதிகம் புகைபிடித்த சிறுமிக்கு நேர்ந்த கதி

அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார்.

உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். 

இதனால் கைலா உயிர்பிழைத்தார். இதுகுறித்து கைலாவின் தந்தை கூறுகையில், 'எனது மகள் படும் வேதனையை பார்த்து நான் ஒரு குழந்தையைப் போல் அழுதேன்.

 அவளுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. அவள் இறக்கப்போகிறாள் என்றே பயந்தேன், தயவு செய்து இளஞர்கள் புகைப்பழக்கத்தை கை விடுங்கள், அதனால் ஒரு பயனும் இல்லை, Its not worth it' என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4