நீர் நிரம்பிய வாளிக்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #baby
Mayoorikka
2 years ago
நீர் நிரம்பிய வாளிக்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு!

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய வாளியொன்றில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் தந்தை வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவத்தின் போது, உயிரிழந்த குழந்தையின் தாயார் குழந்தையை நீராடுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று நீராடுவதற்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பிவிட்டு குழந்தையை அவ்வாளிக்கு அருகில் வைத்துவிட்டு சவர்க்காரம் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.

 இதன்போது வீட்டிற்குள் இருந்த மற்றைய குழந்தையின் அழு குரல் கேட்டுள்ள நிலையில் அந்த குழந்தையைப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டின் பின்புறத்திற்குச் சென்ற தாயார், நீர் நிரப்பப்பட்ட வாளிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த குழந்தை வாளிக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டுள்ளார்.

 இதனையடுத்து தாயார் குழந்தையை பொத்துவில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4