IMF இடம் இருந்து 03ஆவது தவணையாக கடன் பெறும் இலங்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறவுள்ளது.
எனவே, சுமார் 336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் செய்யவும், உரிய மாற்றங்களை ஏற்படுத்தவும் இது வாய்ப்பளிக்கும் என்று கூறியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே