பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழர்களுடனான கலந்துரையாடல்!
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை தொழிற் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
ஒருவர் கிழக்கு லண்டன் ஸ்டர்ட்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடும் உமா குமரன் மற்றும் சட்டன் தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணி ரிஷிகரன். இப்பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுடன் ஒரு கலதுரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 7 மணிக்கு Nakshatra hall snakey lane Feltham. TW13 7NA என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இவர்கள் இருவரும் தமது தேர்தல் பிரச்சாரங்கள் எவ்வாறு இருக்கும் எனவும் தாம் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுக்காக எவ்வாறான மாற்றங்களினை பிரித்தானிய அரசாங்கத்தினால் பெற்றுத்தர முடியும் மற்றும் தமிழ் மக்கள் ஏன் தங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கான விளக்கங்களினையும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகப்படுத்துவதற்காகவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கவும் இவர்களுக்கு ஆதரவு வழங்க குறித்த ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு பெண்களும் தேர்தலில் வெற்றி பெற தமிழ் மக்கள் முன்வர வேண்டும் எனவும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.