மகர ராசியினர் தொழிலில் லாபம் கண்டாலும் முயற்சி இழுபறியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மகர ராசியினர் தொழிலில் லாபம் கண்டாலும் முயற்சி இழுபறியாகும் - ராசிபலன்

மேஷம்:

அசுவினி: திட்டமிட்ட செயல்களை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்த நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபம் தரும். யோசித்து செயல்படுவது நல்லது.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப் போகும். ரோகிணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் தேவை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சி தள்ளிப் போகும். சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும். வருவாயில் இருந்த தடை விலகும். திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த தகவல் வரும். பழைய கடன் வசூலாகும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நிதிநிலை உயரும். ஆயில்யம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்.உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். பூரம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும். உத்திரம் 1: பெரியோர் வழிகாட்டுதல் லாபம் தரும். உங்கள் பணியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர். எதிர்பாராத செலவு தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது. சுவாதி: எதிர்பார்த்த வரவு உண்டாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். பிரச்னை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். வரவு திருப்தி தரும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சி வேண்டாம்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர். அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலத்தை உண்டாக்கும். கேட்டை: தொழிலில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு உங்கள் நெருக்கடியை போக்கும். 

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். லாபம் உண்டாகும். பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வரவு அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும். திருவோணம்: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். பணியாளர் ஒத்துழைப்பால் உங்கள் செயல் லாபமாகும். வருமானம் திருப்தி தரும். அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். சதயம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: அலுவலகப் பணியில் நெருக்கடி அதிகரிக்கும். ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: தொழில் போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் விருப்பம் தள்ளிப்போகும் நாள். உத்திரட்டாதி: உங்கள் முயற்சி லாபமாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் ஒத்துழைப்பு நன்மைதரும். ரேவதி: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.