அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14.06) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி,  ஊவா மாகாணத்தின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று கி.மீ. 40 முதல் 50 வரை காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4